ஆயிரந்தான் மொக்கை போட்டேன்
அழகழகாப் படம் போட்டேன்
செத்தவனே ஒம்பெரு(மை)ம
ஒத்தவரி சொல்லலயே
நேத்தெல்லாம் மொக்க போஸ்ட்டு
போட்டோவுக்கும் கமண்ட்ஸ் போட்டும்
ஆரூடம் சொல்லி வந்த
ஆக்டோபர்ச மறந்தேனே
எழும்பவோ நிக்கவோ
ஏலாத PAUL பத்தி
எழுதியென்ன லாமமுன்னு
எழுதாமப் போனேனோ?
போல்பாதர் பெத்தெடுத்த
பொன்னே குலமகனே
கோல் போட்ட கணக்குச் சொல்லி
கோமகனாய் ஆனீரே!
பப்புமுத்து பிறப்பான்னு
மனசில நீ நெனச்சதில்ல
மொக்கை போட்டுத் திரிஞ்ச ஒண்ணு
பப்புமுத்து ஆகிரிச்சு
ஒன்லைனில் உக்காந்து
ஒல்லியாய் ஒரு பிண்டம்
ஆரூடம் கேக்கயில என்னென்ன
நினைச்சிருப்ப
கும்மி அடிப்பவனோ
குலம் ஆழப்பிறந்தவனோ
பதிவுபோட வந்திருக்கும்
பயபுள்ள இவன்தானோ
இந்த வெவரங்க
ஏதோண்ணும் அறியாம
ஜெயிக்க வச்ச உன்ன
நெனச்சா அழுக வரும்
அடுத்த டீமு எதுவென்று
ஆரூடம் சொன்னீரே
ஆண்டு வந்த லோஷனையும்
அடிச்சுத் துவைச்சீரே
புட்போலே தெரியாம
நீ சொன்ன ஆரூடம்
பொய்யாகிப் போகும் என்று
பொங்கியோர் பலரிருக்க
அத்தனையும் மெய்யாக்கி
அகிலத்தைக் கவர்ந்தீரே
அடுத்த ஃபீபாவுக்குள்
ஆவியாகிப் போனீரே
இந்தியத் தொடரினிலே
இழந்த போர்மை லோஷன் பெற
இரவுத்தூக்கத்திலே
இல்லாமல் போனீரோ
எனக்கொண்ணு ஆனதுன்னா
மொக்கை போட ஆளிருக்கா
நீர் செத்துப் போய்ட்டீரே
ஆரூடம் சொல்ல யாரிருக்கா?
Tweet
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...