டக்ளஸ் அடம்சின் The Hitchhiker's Guide to the Galaxy என்ற சயின்ஸ் பிக்சன் நாவலில் வாழ்க்கை, பிரபஞ்சம் தொடர்பான அனைத்தினதும் இறுதிக் குறிக்கோளாக அமையும் இரகசியத்தைக் கண்டுபிடிக்க ஒரு கணனினை உருவாக்குவார்களாம். அதில் பிரபஞ்ச இரகசியத்தை கண்டுபிடிக்க அந்தக் கணனி 7.5 மில்லியன் வருடங்களை ஆராய்ந்து 42 என்று விடையளித்ததாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது 101010 இன் பைனரி ஆகும்.
அதாவது இன்றைய திகதியை எழுதிப்பாருங்கள். 10.10.10 எனவே 2010ம் ஆண்டு 10ம் மாதம் 10ம் திகதி 10 மணி 10நிமிடம் 10வது செக்கனை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க, இம்முறை விட்டால் நூறு வருடங்களுக்குப் பிறகுதான் வரும். ஒருவகையில் நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் இந்த அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது.
எந்திரன் ரிலீஸ் ஆகி இன்றுடன் 10வது நாளாம், புதிதாக திருமணம் செய்து கொள்பவர்கள் இன்றைய தினத்தில் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார்களாம். விட்டால் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு பிரபஞ்சக்குழந்தை என்று பெயர் வைத்துவிடுவார்களோ.
அது தவிர இந்த October மாதம் 5வெள்ளி, 5சனி, மற்றும் 5ஞாயிற்றுக்கிழமைகள் காணப்படுகின்றன. இது 823 வருடங்களுக்கு ஒருமுறைதான் நிகழுமாம். எனவே எல்லாருக்கும் மாஜிக் அக்டோபர் மாத வாழ்த்துக்கள்..ஹிஹி Tweet
அட பவன் கலக்கல் பதிவு. அப்பிடியே என் பெயரையும் சேர்த்து நீ பதிவு போட்டிருக்கணும். என் பிறந்தநாளை நினைத்து பார். அப்போ புரியும்.