சூரியன் மறைந்து சில நிமிடங்கள் தாண்டியிருந்தது. அமாவாசை தினம் வானில் நட்சத்திரங்கள் மட்டும் இராஜாங்கம் செய்து கொண்டிருந்தது. கிறிக்கட் விளையாடிவிட்டு களைப்புடன் வீட்டுக்கு வந்த கன்கொனை தனது மெல்லிசையால் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் சத்தமாகக் குளிர்விக்கத் தொடங்கினர். கதவை பூட்டிவிட்டு வரவேண்டும் என்று நினைத்தவர் கடைசியின் இளையராஜாவின் இசைமயக்கத்துக்கு அடிமையாகி அதை மறந்தே போனார்.
அதே நேரம் பப்பரப்பா எனத் திறந்திருந்த இவரது வீட்டுக்குள் ஒரு 3அடி கூட வளராத குள்ள உருவம் நுழைந்துகொண்டிருந்தது. முதலில் வீட்டு சோபாவில் இடது பக்க ஓரத்தால் ஏறி மற்றப்பக்கமாகக் குதித்து இறங்கியது. அப்படியே கன்கொனின் கணனிஅறையைத் தாண்டிச்சென்றது. மீண்டும் ஹாலுக்கு வந்தது. இப்போது எதையோ பார்த்து பிறீசாகி நின்றது. வீட்டு ஹாலில் வைக்கப்பட்டிருந்த மேசை மீது வைக்கப்பட்டிருந்த டென்னில் பந்துகள் அடங்கிய டின் கண்முன்னே தெரிய கன்கொனின் கணனியில் பாடிக்கொண்டிருந்த “தெய்வமே.. தெய்வம…” என்ற பாட்டின் “கண்டுகொண்டேன் அன்னையை… கண்டுகொண்டேன் அன்னையை” என்ற வரியும் ஒலிக்க சரியாக இருந்தது..:P
மேசைமீது தட்டுத்தடுமாறி ஏறிய உருவம், பந்துடின்னைப்பற்றி அதை ஏறி நின்ற நிலையிலேயே திறக்கமுயல நிலைதடுமாறி கிழே விழ தொபுக்கடீர் என்ற சத்தமும் கேட்க கன்கொன் ஓடி வந்து பார்க்க ஒரு பச்சிளம் பாலகன் பந்தைப் பற்றியபடி சோபாவுக்குள் தலைகுப்புறக் கிடந்துகொண்டிருந்தான். கன்கொனின் பாட்டும் நிறைவடைந்து அடித்த பாட்டு ஒலிக்க ஆரம்பிக்கும் அந்த காப்பில் இவ்வளவும் நடந்துமுடிந்திருந்தது.
“தம்பி, நீ யார்? எங்கயிருந்து வாறாய்? என்று கன்கொன் கேவிக்கணைகளை அடுக்கத் தொடங்கினார்.
“அங்கிள்,(கன்கொனின் கண்கள் விஜகாந்தின் கண்போல சிவத்து, விஜயின் கண்போல கைகள் முறுக்கேளிக்கொண்டிருந்தது..) நான் மந்தி என்றான் சிறுவன்.
“ங்கொய்யால சரியாத்தாண்டா பெயர் வச்சிருக்கிறாங்க உனக்கு? சரி எங்க இருந்து வாற?
“அங்கிள் நான் நான் மேல் மாடியைக் காட்டினான், ஓ.. சிறீ அங்கிள் வீட்டுக்கு வந்த பொடியனா?
“ஆமாங்க, அவர் என் சித்தப்பா என்றவன் தாமதிக்காது விடயத்துக்கு வந்தான்,
“அண்ணே உங்களிட்ட 3 பந்து இருக்கு எனக்கு ஒரு பந்து தாங்களேன்? என்றான்.
“முடியாது, இது டீம் போல் தம்பி, பந்தைத்தா..-கன்கொன்
“பிளீஸ் அங்கிள் பிளீஸ்… பிளீஸ்.. என்று கெஞ்சிக் கெஞ்சி.. இப்பொது அழ ஆரம்பித்துவிட்டான்.
விஜய், விஜயகாந்த் ரேஞ்சில் கோபத்தின் உச்சியில் இருந்த கன்கொன் இப்பொது “அழகு குட்டிச்செல்லம்” பாட்டில் வரும் பிருத்விராஜின் அழவுக்கு மனமிரங்கி.
“சரி தாறன் பட் வன் கண்டிசன், நாளைக்கு காலம திருப்பித்தருவதாக உறுதிமொழி கொடு என்றார்.
“ஓகே.. அங்கிள் நாளைக்கு காலமயே தந்திடுவன் டோன்ட் வொர்றி.. என்று பந்துடன் எஸ்கேப் ஆனான்.
மறுநாள் மாலைவரை பொறுத்திருந்த கன்கொன் விளையாட நேரமானதால் சிறீ அங்கிள் வீட்டுக்குப் போய்
“ அங்கிள் மந்தி இல்லையா?
“இல்லைத்தம்பி அவங்க நேற்றே இங்கிலண்டுக்கு போய்ட்டாங்களே…
பாக்ரவுண்டில் சீறும் பாம்பை நம்பு… சிரிக்கும் பொடியனை நம்பாதே என்று பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது.
Tweet
அடப்பாவியளா......!