கற்களையும் முட்களையும்
மேடுகளையும் பள்ளங்களையும்
மலைகளையும் காடுகளையும்
தாண்டிச் சென்று கொண்டிருந்தோம்
எட்டி உதைவதற்கு நாங்கள் ஒன்றும்
ஏணியில் ஏறிச் செல்லவில்லை
இரும்புத் தரையில் நெருப்பு மூட்டி - அதன்
மேல் நடக்கும் கந்தகப் பயணம் அது
நீ வேகமாக ஏறிச் சென்று
கற்களை உருட்டிவிட்டாய்
நாம் அதில் தாறுமாறாக அடிபட்டு
குருதியில் குளித்து வந்தோம்
ஏதோ ஒரு சமதரையில் - நாம்
மீண்டும் சந்தித்தபோது
நீ உனக்கு முன் சென்ற
ஒருவனுடன் சேர்ந்து
எமக்கு வீசுவதற்க்கு குண்டுகள்
தயாரித்துக் கொண்டு இருந்தாய்
விலகி ஓடி உயிர் தப்பி
வேறு பாதையில்
சென்று கொண்டிருக்கிறேன்
நான் மேலேறி பிழைத்து வந்தால்
உனக்கு கற்களைக் கொண்டு
வீசப்போவதில்லை
மாறாக நயவஞ்சகத்துக்கும்
பாறைகளையும் குண்டுகளையும்
தாங்கிக் கொள்ளும்
வலிமையான மனதைப்
பெறச் செய்த உதவிக்கும்
நன்றிகள் சொல்லி
விடைபெற்றுக் கொள்வேன்
முடிந்தால் வெவ்வேறு
சிகரங்களிலிருந்து
மீண்டும் சந்திக்கலாம்.
-Bavan
Tweet
மேடுகளையும் பள்ளங்களையும்
மலைகளையும் காடுகளையும்
தாண்டிச் சென்று கொண்டிருந்தோம்
எட்டி உதைவதற்கு நாங்கள் ஒன்றும்
ஏணியில் ஏறிச் செல்லவில்லை
இரும்புத் தரையில் நெருப்பு மூட்டி - அதன்
மேல் நடக்கும் கந்தகப் பயணம் அது
நீ வேகமாக ஏறிச் சென்று
கற்களை உருட்டிவிட்டாய்
நாம் அதில் தாறுமாறாக அடிபட்டு
குருதியில் குளித்து வந்தோம்
ஏதோ ஒரு சமதரையில் - நாம்
மீண்டும் சந்தித்தபோது
நீ உனக்கு முன் சென்ற
ஒருவனுடன் சேர்ந்து
எமக்கு வீசுவதற்க்கு குண்டுகள்
தயாரித்துக் கொண்டு இருந்தாய்
விலகி ஓடி உயிர் தப்பி
வேறு பாதையில்
சென்று கொண்டிருக்கிறேன்
நான் மேலேறி பிழைத்து வந்தால்
உனக்கு கற்களைக் கொண்டு
வீசப்போவதில்லை
மாறாக நயவஞ்சகத்துக்கும்
பாறைகளையும் குண்டுகளையும்
தாங்கிக் கொள்ளும்
வலிமையான மனதைப்
பெறச் செய்த உதவிக்கும்
நன்றிகள் சொல்லி
விடைபெற்றுக் கொள்வேன்
முடிந்தால் வெவ்வேறு
சிகரங்களிலிருந்து
மீண்டும் சந்திக்கலாம்.
-Bavan
சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்