கடலிலே தரை மோதிப்
படகொன்று மிதக்கும் - அதன்
உயிர் மீட்டு கடல் சேர்க்க
உயிர் மீட்டு கடல் சேர்க்க
அலைகள் வந்து அடிக்கும்
மனதிலே திரை நீங்கி
ஞாபகங்கள் உதிக்கும் - என்
நாட்காட்டி பின்னோக்கி
நகர்ந்திடவே துடிக்கும்
எங்கேயோ வெறித்தபடி
கண்கள் மெல்ல விறைக்கும்
இழந்ததெல்லாம் இழந்ததென
இழந்ததெல்லாம் இழந்ததென
மனதில் மெல்ல உறைக்கும்
கால் மோதிச் செல்லுகின்ற
கடலலை போல் நானும்
பின்னோக்கி சென்று வாழும்
பின்னோக்கி சென்று வாழும்
வரம் பெற்றிட வேண்டும்
கால் நனைத்த கடலினிலே
கனத்த கண்ணீர் வீழும்
மிதக்கின்ற படகினிலே - என்
மிதக்கின்ற படகினிலே - என்
கண்கள் மீண்டும் மாளும்
-Bavan
அருமையான கவிதை .