02-06-2016
தண்ணீர்க்காகம் அரை மணிநேரமாக இறகை விரித்துப் பிடித்து வெயிலில் உலர்த்தி விட்டு மீண்டும் தண்ணீருக்குள்ளே குதிக்கிறது! நானும் தான்!
01-06-2016
வாழ்க்கையில ஒரு நாளில் அளவுக்கதிகமான பிரச்சனைகளை சந்தித்துக் களைக்கும் போது ஒரு இடைவிடாத சிரிப்பு ஒன்று முகத்தில் தோன்றி இருக்கும். அதுதான் ஜென் நிலை!
30-05-2016
வழக்கமாகப் போகும் பாதைக்கு குறுக்கே திடீரென வெட்டப்பட்ட ஒரு பள்ளத்தில் முதல் நாள் சமநிலை குழம்பி விழுந்து எழுந்து சென்றிருப்போம்.அடுத்தநாள் அந்த இடத்தில் சற்றே மெதுவாகப் போய் அவதானமாகச் சென்றிருப்போம்.
அதற்குப் பின்னர் குழியில் விழாமல் விலகிச்செல்ல ஒரு வழியையோ அல்லது மாற்று வழியையோ கண்டுபிடித்து அதனூடாக சென்று இருப்போம்.
வெட்டப்படும் பல குழிகள், வழிகளைக் கற்றுக் கொடுக்கவே தவிர, வலிகளைக் கொடுக்க அல்ல!!!
11-05-2016
ஒரு structureக்குள் வட்டமடித்து வாழ்க்கையை தொலைத்துவிட்டு, தொலைத்தது கூடத்தெரியாமல் தங்கள் வட்டம் சிறந்த வட்டம் என்று நினைப்பவர்களுக்கு, வட்டமே கீறாமல் வாழ்க்கையை வாழுகின்றவர்களின் நிலையை உணர்வது கடினம்தான்! என்ன தமது வரையறைகளைத் தாண்டி யோசிக்காத அவர்களின் நிலையை நினைத்து பரிதாபப்படுவதை விட எங்களால் வேறொன்றும் செய்ய முடியாது!
நீங்கள் போட்டுத்தாக்கியது
Post a Comment