திரண்டு வந்த அலை ஒன்று
திசை மாறித் திரும்பியதோ!
முகில் வழிந்த துளி ஒன்று
வரும் வழியில் சிதறியதோ!
இரு விழிகள் வெறித்த திசை
குவியமின்றி கரைகிறதே!
கனங்கள் தாங்கும் மனம்
கதறி அழத்துடிக்கிறதே!
மீள்வதெல்லாம் கஷ்டமில்லை
துளி கூட அதற்கு இஷ்டமில்லை
வறண்ட அந்த வாழ்க்கையிலே
நினைவுகள் கூட பசுமையில்லை
பாதைகளில் விழுந்து உருண்டு
மேடு பள்ளங்களில் புரண்டு
பல இடம் தடம் மாறி
பைத்தியங்கள் சில தேறி
வெட்டி வீழ்ந்த இதயத்தின்
துண்டுகளைப் பொறுக்கி
அனுபவ ஊசி கொண்டு
அதைத் கோர்த்து ஒன்றாக்கி
விரைந்தெழுந்து ஓடி வந்து
திரும்பி பார்க்கையிலே
ஒரே ஒரு கேள்வி மட்டும்
ஒற்றையாய் நிற்கிறது
நீ மட்டும் ஒரு நிமிடம்
திரும்பிப் பார்த்திருந்தால்
அத்தனை வாழ்க்கையுமே
அழகாகிப் போயிருக்கும்!
-Bavananthan
நீங்கள் போட்டுத்தாக்கியது
Post a Comment