தமிழ்ப்படத்தின் ஓ.. மகசீயா பாடல் - இந்தப்பாடலை இதுவரை எத்தனை தடவை கேட்டிருப்பேன்? ஹீஹீ அதையெல்லாம் எண்ணிகிட்டிருக்க முடியுமா..:p அப்படியே கண்ணை முடிக்கொண்டு ஏன் திறந்துகொண்டு கேட்கும் போதுகூட என்னை சிரிப்புலகுக்கு கூட்டிக்கொண்டு போய் காமடி மன்னர்களின் மத்தியில் நிற்க வைத்தது போல ஒரு உணர்வு. மீண்டும் மீண்டும் கக்கபிக்கே கக்கபிக்கெ என்று சிரிக்கத்தூண்டும் பாடல். இந்தப்பாடலைக் கேட்டும்போது அடிவயித்திலிருந்து ஒரு சிரிப்புபெடி அப்படியே மேலே ஏறி கபாலம்வரை சென்று அங்கிருக்கும் முடியை கம்பிபோல எழுப்பிவிட்ட பின்னர், வாய்பழியாக வெடித்துப்பீறீ கலகலவென சிரிப்பு கொட்டுகிறது.
ஸ்வேதாவின் குரலில் சலனமில்லாமல் ஆரம்பித்து அப்படியே கீபோர்ட் இசை மற்றும் ஹரிஹரன் FEEL பண்ணிப்பாடும் குரல் ஆகியன அப்படியே ஒரு மொக்கையர் உலகத்துக்குள் இழுத்துப்போட்டுவிடுகிறது. பாடல் முழுவதும் உறுத்தாமல் வந்துபோகும் அர்த்தமுள்ள வரிகள் பாடலின் சிறப்பம்சம்.
பாடல் படமாக்கப்பட்ட விதம்தான் இந்தப்பாடலின் ஒட்டுமொத்த அர்த்தத்தையும் வெளிப்படுத்தி மப்பும் மந்தாரமுமான காலைவேளையில் ஆரம்பிக்கும் பாட்டு கூவம் ஆற்றங்கரையோரமாக கதாநாயகியை நாயகன் விட்டு துரத்துவதும் அதன்பின்னர் தனது மந்திரஜாலத்துக்குள் நாயகியைக்கட்டுப்படுத்திய நாயகன் நாயகியை பாடும்படி செய்யும் சைகையை உணர்ந்து அவர் பாட ஆரம்பிக்கும் காட்சி அற்புதம்.
ஓ.. மகசீயா.. ஓ.. மகசீயா..
நாக்கமுக்க நாக்கா ஓ.. சக்கலாக்கா...
ஓரண்டக்கா..
மகசீயா என்று அக்கறையுடன் காலையில் எழுந்ததும் நாக்கு மூக்கு கழுவினியா? பல்லுவிளக்கி ஓரமாச்சப்பித்துப்பினியா என்று காதலன் காதலி ஆகியோர் அக்கறையுடன் விசாரிப்பத்துக்கொள்வது போல ஆரம்பிக்கும் வரிகள் நாமும் பல்லுவிளக்கினோமா என்று ஒருதடவை சிந்திக்கவைக்கிறது.
ஓ..லாகி ஓ..லாகி
ஆயக யகியகி மெஹோ மெஹோ
டைலாமோ டைலாமோ
ரஹதுல்ல சோனாலி..ஓ..
லாகி என்று காதலனை அழைத்து ஆயா வந்து யகீஈ.. யகீஈ.. என்று ஈ என்ன பல்லை விளக்கிவிட்டார் என்று குறிப்பிடுவது முதல் ஆமாம் ரஹத்துல்ல சோனாலி என்ற ஆயா தைலம் கூடத்தடவி விட்டார் என்று குறிப்பிடுவது, தைலத்தின் வாசனையை அப்படியே மூக்கின் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
சாம்ப சம்பாலே..
ஓ சூசே சாயோ சாயோ..
ஹசிலி பிசிலி..
இல்லாகி..
யப்பா ஜிப்பா
சாம்பலாலே நீ பல்லு விளக்கினியா? இல்லை காலையிலெழுந்து சாயா(தேனீர்) குடிச்சியா? கசக்கிப்பிழிஞ்சு உன் ஜிப்பா துவைச்சியா என காதலி கேட்க அதற்கு காதலன் பதில் சொல்லும் காட்சி நாற்றமடிக்கும் துவைக்காத எமது சட்டையை நினைவில் கொண்டுவந்து நிறுத்துகிறது.
டைலமொ டைலமொ..பல்லெலக்க..
நாக்க முக்க நாக்க..
ஓ ஷகலக்க..
ஓ ரண்டக்க
பாடலை முதன்முறை கேட்ட போதே என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை, தைலம் தன் பல்லில் பட்டுவிட்டதாக காதலியிடம் காதலன் உருகித் தெரிவிக்கும் காட்சி எமது பல்லையும் ஒரு தடவை கூசச்செய்கிறது. அதன் பின்னர் காதலி கவலைப்படாதே நாக்கில மூக்கில படலத்தானே என்று சமாதானப்படுத்துவது, அவர்களின் அன்பை எரிச்சலின்றிக் காட்டுகிறது.
ஏ சல சாலா..
இஸ்க்கு பரா(ட்)ரா..
ஒசாக முராய..
பூம் பூம் ஜக்காக்கா..
முக்கால்லா..
மய்யா மய்யா
இந்தவரிகளை எவ்வாறு விபரிப்பது? உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறது, உங்களுக்கு வைக்கப்படட் பராட்டாவையும் சால்னாவையும் பூனை தின்றது போன்ற உணர்வைத் ஏற்படுத்துகிறதா? வரிகளில் சொல்லப்படும் பராட்டாவை பூனை திருடிவிட்டது என்று பசியுடன் காதலன் சொல்லும் இந்த வரிகளில் வரும் பராட்டாவை வாயால் சாப்பிடவே முடியாது.
கலாட்டாவுடன் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்...
நான் தான் முதலாவது....