நாம்
வாகனம் கடக்கும்
பாதையில் நின்று
பேசிக் கொண்டிருக்கிறோம்
வாகனம்
எம்மைக் கடக்கும் போதும்
அசையாமல் பேசிக்
கொண்டிருக்கிறோம்
எம்மைக் கடக்கும் போதும்
அசையாமல் பேசிக்
கொண்டிருக்கிறோம்
இரண்டு தரம்
பயந்தடித்து எழுந்து
படபடத்து துடித்து
குதித்தெழுந்து ஓடி
பயந்தடித்து எழுந்து
படபடத்து துடித்து
குதித்தெழுந்து ஓடி
மயிரிழையில்
உயிர் தப்பிய நாய்
ஓரமாகச் சென்று
படுக்கிறது
உயிர் தப்பிய நாய்
ஓரமாகச் சென்று
படுக்கிறது
நன்று! நாம் பேசிக் (மட்டுமே)கொண்டிருக்கிறோம்