இதழோரம் நீயும்
சிரித்தாலே போதும்
இமை மூடி நான் வீழுவேன்
இறகொன்றில் மோதி
இறக்கின்ற போதும் - உன்
விழி கண்டு உயிர் மீளுவேன்
அவிழ்கின்ற பூவும்
அதிகாலை நிலவும்
அழகென்று நினைத்தேனடி
உன் அதரத்தின் ஓரம்
நா மோதும் ஈரம் - நான்
ஞானத்தில் குளித்தேனடி
பிறக்கின்ற நொடியும்
இறக்கின்ற வலியும்
ஒன்றாக உணர்ந்தேனடி
அலைபாயும் விழியில்
அறைந்தாயே என்னை
ஐயையோ தொலைந்தேனடி
-Bavan
Movie: Puzuthi
Director: Sri Niroshan
Lyrics: Bavan
அருமை