Image Courtesy: www.heavtryq.com |
என் அன்பே ஒருமுறை பார்த்தாய்
என் ஆயுள் பல நொடி சேர்த்தாய்
உன் விழியின் அசைவிலே மீண்டும்
நான் இறந்தே பிறந்திட வேண்டும்
உன் கண்களில் மின்னிடும் காதல் - அதை
கண்டேன் பலமுறை நானும்
நீ மீண்டும் காதலை சொன்னாய்
என் இதயத்திலே உனை நெய்தாய்
புல்லின் மீது வாழும்
குளிர் பனித்துளி போலே நீயும்
சொல்லாமல் என் மேல் மோதும்
உன் காதல் என் மேல் வீழும்
இமை கோதும் பூவும் நீதானா
இதழோரம் கொஞ்சம் மலர்வாயா
முகை மோதும் தேனீ நான்தானா
மோட்சங்கள் இன்றே தருவாயா
அடிவானில் மேகம் போல நானும்
உனைத் தேடி வருவேனே நாளும்
கரை மோதும் அலை போலே நீயும்
எனைத் தீண்டிப் போனாலே போதும்
துளிகளின் இடையினில்
இடைவெளி நெடுகினில்
நுழைகிற மழை நீயா
நிலை குலைகிற பொழுதினில்
விழுகிற மழை விழிக்
குவியத்தை மாற்றுவதேன்
உன் விழியில் நுழைந்து கொண்டு
இதயம் கடந்து வந்து
அணுவில் கலந்து விடவா
கடல் அலையில் குதித்துச் சென்று
குமிழிகளை இணைத்து
மாலை தொடுத்து வரவா
-Bavan
Composer: Roshan
Vocal: Rahulan
Lyrics: Bavan
*Yet to be released.
நீங்கள் போட்டுத்தாக்கியது
Post a Comment