சில பாடல்கள் முதல் தடவை கேட்ட உடனேயே தொண்டைக்குள் ஏதோ ஒரு அடைப்பு ஏற்பட்டு, இதயத்தில் ஏதோ பாரம் ஒன்று உருவாகி, கண்கள் எம்மை அறியாமலேயே மூடி, தலை இசைக்கேற்றபடி தலையாட்டி மனதுக்குள் அப்படியே ஒட்டிக் கொண்டு விடும்.
அதற்குப் பிறகு அப்பாடலை எத்தனை தடவை கேட்டாலும் ஏதோ ஒரு புதுமை இருப்பது போலவே இருக்கும். கூடுதலாக இன்றைய இளைஞர்கள் கூட்டத்தில் அப்படி ஒட்டிக் கொண்ட பாடல்களில் பல யுவனின் பாடல்களாகவே இருந்திருக்கின்றன.
முதன்முறையாக யுவனிற்குப் பிறகு அனிருத்தின் சில பாடல்கள் அப்படியான ரகங்களாக உருவாகிக் கொண்டிருக்கின்றன.
டேவிட் படத்தில் "கனவே கனவே" என்ற பாட்டு எத்தனை தடவை கேட்டிருப்பேனோ தெரியவில்லை, ஆனால் கட்டாயம் 1000 தடவைகளைக் கடந்திருப்பேன். எம்மை அப்படியே ஏதோ ஒரு கனவு உலகத்திற்கே அழைத்துப் போய்விடுகிறது இந்தப்பாடல்.
Tweet

கோரமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதேஅனிருத்தின் இசையமைப்பில் வெளிவந்த "போ நீ போ"க்குப் பிறகு கிட்டத்தட்ட எனது உயிரைக்கொண்டு/கொன்று போன பாடல் இது. புல்லாங்குழலும் வயலினும் இணைந்து வரும் இடங்களில் அப்படி ஒரு கவலை, சோகம், கோபம், வேகம் திடீரென்று அமைதி அந்தப் பிண்ணனி இசை ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.
உயரமான கனவு இன்று அலையில் வீழ்ந்து போனதே
இசையும் போனது திமிரும் போனது
தனிமை தீயிலே வாடினேன்
நிழலும் போனது நிஜமும் போனது
எனக்குள் எனையே தேடினேன்
கனவே கனவே கலைவதேனோ
கரங்கள் ரணமாய் கரைவதேனோ
கண்கள் ரெண்டும் நீரிலேசில பாடல்கள் வரிகள் நன்றாக இருந்தால் இசையும் பிடித்துப் போகும். ஆனால் இந்தப் பாடலின் இசையால் வரிகளும் பிடித்துப் போகிறது. வரிகளில் உள்ள வலியை மேலும் மேலும் அதிகமாக உணரவைக்கிறார் அனிருத்.
மீனை போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா
நானும் இங்கே வலியிலேபடத்தில் பாடல் படமாக்கப்பட்ட விதமும் பாடல் படத்தில் வந்த இடமும் இரண்டு காலகட்டங்களில் நடக்கும் போராட்டமும், இழப்பும், வலியும், கோபமும், சோகமும், ரணமும் வயலின், புல்லாங்குழல், சித்தாருடன், அனிருத்தின் குரலும் இதமாக வருடுவதுமாதிரி இருந்தாலும் இதயத்தில் ஆழமான முள்ளினால் குத்தப்பட்ட ஒரு வலியை உணர்த்திப் போகின்றது.
நீயும் அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசி போன வார்த்தையை
இது நியாயமா மனம் தாங்குமா
என் ஆசைகள் அது பாவமா
கனவே கனவே...
கரங்கள் ரணமாய்...
நினைவே நினைவே கலைவதேனோ
எனது உலகம் உரைவதேனோ
நீங்கள் போட்டுத்தாக்கியது
Post a Comment