அது ஒரு பிரபஞ்சம்
அண்டப் பெருவெளியில் - மனம்
அலைக்களிப்படும் உணர்வு
எங்கோ அடைக்கலமின்றி
அடைபட்ட பயம்
கவலைகள் ஏதுமற்ற
குழந்தையின் மகிழ்ச்சி
கந்தகபூமியில் நெருப்பு மூட்டி
இதயத்தைக் கொழுத்திய கோபம்
சிறுகதை படித்த பின்னர்
சிலாகித்து வரும் ஆச்சர்யம்
அது ஒரு தியானம்
கண்களும் உள்ளுணர்வும் சங்கமமாகி
நரம்புகளுக்கு நாணேற்றி
நொடிப் பொழுதில்
திண்ம திரவ வாயு நிலைகளை
மாற்றி மாற்றி உருவாக்கும்
வார்த்தைகளில் அடக்க முடியாத
ஒரு வசீகரமான உணர்வு
நல்ல கவிதை....
நன்றி.
www.padugai.com
thanks