சில பாடல்களைக் கேட்ட உடனேயே அடடா என்ன ஒரு அருமையான தத்துவப்பாடல் என்று மெய்சிலிர்த்துப் போய் அப்பிடியே மீண்டும் மீண்டும் வரிகளைக் கேட்கத் தூண்டும். அந்த வகையில் "ஓ மகசீயா.." பாடலுக்குப் பிறகு எனக்கு பிடித்துப் போன(கிட்டத்தட்ட பக்கத்தில் இருப்பவர்களெல்லாம் எனக்குப் பைத்தியம் பிடித்துப் போச்சோ என்று நினைக்க வைத்த) பாடல் கலியுகம் படத்தில் இடம்பெற்ற "அஜல உஜல மசாலா கம்பனி" என்ற பாடல். என்ன ஒரு தத்துவமான வரிகள், அதுவும் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் வித்தியாசமான கோணங்களில் அர்த்தங்களை அள்ளித் தெளித்து அப்படியே வயிறு வெடித்து பல்லு எல்லாம் கொட்டி, தாடைகளில் எல்லாம் வலியெடுக்கும் அளவுக்கு சிரிப்பை ச்சா சிந்தனையை தரும் பாடல்.
"வாழ்வு என்ன மாயமான வாழ்வுதானடா - உன்
ஆட்டமெல்லாம் முடிந்த பின்னே ஓட்டம் தானடா"
என்று வாழ்க்கை திருக்குறள் போல இரண்டு வரிகளில் தெளிவாகச் சொல்லிவிடுகிறது இந்த வரிகள். அதற்குப் பிறகு வரும் வரிகளின் அர்த்தம் தான் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய வரிகள்.
"அஜல உஜல மசாலா கம்பனி
பல்பலா ரஸ்கோலா பிஸ்கோத்துக் கம்பனி"
அதாவது அஜல உஜல என்ற மசாலா தயாரிக்கும் கம்பனியில் வேலை செய்யும் பற்பல ஊழியர்களுக்கு கோலாவும் பிஸ்கோத்தும் கொடுக்க வேண்டும். அதாவது இந்த வரிகளில் ஏழைகளுக்கு வேலை நேரத்தில் சாப்பாடு வழங்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் மரண கானா விஜி.
வானத்தில தேவதை போல மனசில வச்சேன்
உள்ள ஓடும் உசிர நானும் கையில புடிச்சேன்
உன் மூக்கிலக்கீர முன்முத்து மூக்குத்தி மூளையைப் பிரட்டுது
டப்பா சோறு போல மனசு டான்சு ஆடுது
மரண கானா விஜியின் அற்புதமான குரலில், சலனமில்லாமல் ஆரம்பித்து மெதுவாக அழகாக நகர்ந்து வரும் பாடலின் அடுத்து வரும் இந்த வரிகள் இன்னும் சில காலங்களில் காதல் காவியங்களில் இடம்பிடித்து தமிழ் இலக்கிய உலகை உலுக்கி ஆட்டிப்படைக்கப் போகிறது என்பதில் ஐயமில்லை.
தேவதைகள் பூமிக்கு வருவதில்லை எனவே தேவதையை கவிஞர் மனதிலே வைத்துக் காதலிப்பதாகவும், நாடித்துடிப்பை அறிய வைத்தியர்கள் கையில் நாடி பிடித்துப் பார்ப்பதை கருத்தில் கொண்டு உள்ள ஓடும் உசிரை கையில புடிச்சேன் என்று சொல்லும் கற்பனை அபாரம்.
பெண்களின் மூக்குக்கும் மூக்குத்திக்கும் மூளைக்கும் ஆரம்ப எழுத்து மட்டுமல்ல ஆண்களின் மூளையைப் பிரட்டி யோசிக்க வைக்கக் கூடிய அற்புத ஆற்றல் இருக்கிறது என்பதை எதுகை மோனையுடன் சொல்லியிருப்பதும், சோற்று டப்பாவை கொண்டு செல்லும் போது டப்பாவுக்குள் இருக்கும் சோறு எப்படியெல்லாம் பாடுபடுமோ அப்படிப் பாடுபடுவதாகக் குறிப்பிடுவது வரை பிரமாதம்.
ஓட்ட மைதானத்தில வெளையுதடா நெல்லுஅது வரை மிகவும் அமைதியாகச் சென்று கொண்டிருந்த பாடல் திடீரென்று வேகம் பிடித்து பள்ளத்தில் இறங்கிய பிரேக் இல்லாத சைக்கிள் போல வேகமாகச் செல்கிறது.
நீ சண்டை வந்தா எடுக்காதடா கல்லு
பீல் பண்ணாதடா லச்சை நான் காறி உமிழ்வேன் எச்சை
நீ சாராயத்தைக் குடிச்சா நான் சண்டையில புலி
சென்ரல் ஜெயில்ல அண்ணன் தம்பிக்கு குடுக்கிறான்டா கழி
கழியின்னா கெவரு இது கவர்மன்டு பவரு
அட என்னா தம்பி நிக்குற இடத்த விட்டு நவரு
கஞ்சித்தண்ணி புல்லாவுக்கு
பழக்கத்திலுள்ள பாப்பாவுக்கு ஊத்தினான்டா தேரு
மச்சான் அவ போறா அவ எனக்கு மொற
கையால விட்டேன் பாரு அறை
வாயில மூக்கில தள்ளப் போவுது நொரை
ஒவ்வொரு வரியும் ஆச்சரியங்களையும், வியப்பையும், மரண கானா என்ற பெயர் ஏன் தனக்கு வைக்கப்பட்டது என்பதையும் பாடலாசிரியர் காட்டுவதாகவும் அமைகிறது. இந்தப்பாடல் சரித்திரத்தில் முக்கிய இடம் பிடித்து அனைவது தலையையும் பிய்த்துக் கொண்டு கட்டாயம் தெருத்தெருவாகஅலைய வைக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. =P
உங்கள் பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...
நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)