உண்மையில் நடந்தது என்ன?
அன்று அதிகாலை 9 மணிக்கு 'ஈடா ஈடா ஈடா..' என்று ஃபோன் அடிக்க யார்ரா அது காலக்காத்தாலயே கொசுத்தொல்லை என்று சலித்துக் கொண்டே கண்ணை மூடிய படியே ஹலோ என்றேன். மறுமுனையில்
"மச்சி நான்தான்டா, இப்ப TRINCOல தான் வந்து நிக்குறன், Main Street Nation trust Bankல நிக்கிறன் வாறியாடா செட் ஆவம்" என்று ஒரு குரல்.
"சும்மா போ மச்சி, தூங்குற நேரத்தில டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு. நீ எங்க வீட்டுக்கு வாடா, என்றேன்
"டேய் எனக்கு இடம் எல்லாம் தெரியாதுடா, நீ வாடா. என்றான் நண்பன் மறுபடியும்.
இன்னாடாது வம்பாப் போச்சுன்னு சரி பத்து நிமிஷம் என்று ஃபோனைக் கட் பண்ணினேன்.
*******
10 நிமிடங்களின் பின்னர் (அதாவது 35 நிமிடங்களின் பின்)
இது திருகோணமலையில் நேஷன் ட்ரஸ்ட் வங்கி திறப்புவிழாவாம், அதற்குத்தன்னை அழைத்ததாகவும், அதனாலேதான் தான் வந்ததாகவும், நண்பன் சொன்னான். ஓகே மச்சான் அப்பறம் கை எப்பிடி இருக்கு என்று கேட்டேன், உடனே கடுப்பாகி, என்ன இருந்தாலும் நீ அவ்வளவு ஃபாஸ்டா போலிங் செய்திருக்கக் கூடாதுடா, என்று திட்ட ஆரம்பிக்க, நான் சண்டைல கிழிகாத சட்டை எங்க இருக்கு விடு மச்சி என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.
அதன் பிறகு விவிஎஸ் லக்ஸ்மன் ஓய்வு அறிவிக்கப் போவதாக சொன்னான், எப்ப அறிவிக்கப் போறானோ தெரியல முதல் அசாட் ராஃப், ஆன்ரியா வரை அனைத்தையும் அலசி ஆராய்ந்தோம். அதன் பிறகு "இண்டைக்கு எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு மச்சி, கோவிக்காத அடுத்த முறை வீட்டுக்கு இன்வைட் பண்ணுறன்" எண்டு சொல்லிட்டு நான் விடைபெற்று வந்திட்டேன்.
கற்பனையில் நடந்தது என்ன?
அன்று சங்கா Nations trust Bank திறப்பு விழாவுக்கு வருவதாக கேள்விப்பட்ட உடனேயே அடித்துப் பிடித்து ஓடிப்போய் Bank வாசலில் நின்று கொண்டோம். ஆனால் அங்கே ஏற்கனவே கூட்டம் அலை மோதியது. வெளியெ நின்றால் வேலைக்கு ஆகாது என்று தெரிந்து உள்ளே முட்டி மோதி நுழைந்தால் சங்கா சாப்பிடப் போய்விட்டார் என்றார்கள்.
காத்திருந்து பார்க்கலாம் என்று பார்த்தால் பாங்க் ஊழியர்கள் ஏன் நிற்கிறீர்கள் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். உடனே Account திறக்க வேண்டும் என்று சொல்லி form வாங்கி கையில் வைத்துக் கொண்டோம். சங்கா வர அரைமணி நேரத்துக்கு மே ஆகும் போல் தெரியவே, Account formமில் பின் பக்கத்தில் பின்வருமாறு எழுதி வைத்திருந்தோம்.
சங்கா வந்ததும் உடனடியாக அதைத் தூக்கிக் காட்டி போட்டோ எடுக்க வேண்டும் சங்கா என்று கேட்க உடனடியாக கட்டாயம் எடுப்போம் வெளியே வாருங்கள் என்று எங்களை அழைத்துக் போய் ரசிகர்கள் அனைவரையும் நான்கு நான்கு பேராக அழைத்து போட்டோ எடுத்துக் கொண்டோம். அப்போதுதாக் புரிந்தது சங்கா எப்பயுமே 4க்கு ட்ரை பண்ணுவதால் தான் அடிக்கடி 100, 200 என்று அடிக்கிறார் என்று...
டிஸ்கி: பதிவில் SUBTITLE எல்லாம் சரியாகத்தான் போடப்பட்டுள்ளது =P
Tweet

அடடா! இந்த போட்டோக்கு பின்னாடி இப்படி ஒரு சோக கதை இருக்குமெண்டு நினைக்கவே இல்லடா!
//, என்ன இருந்தாலும் நீ அவ்வளவு ஃபாஸ்டா போலிங் செய்திருக்கக் கூடாதுடா, என்று திட்ட ஆரம்பிக்க, நான் சண்டைல கிழிகாத சட்டை எங்க இருக்கு விடு மச்சி என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.//
இதுக்கு பிறகுதாண்டா! நான் எல்லாம் ஏன் கிரிக்கெட் விளையாடுறன் எண்டு எனக்கே புரிஞ்சுது!