பஸ்ஸில் தனிமையில் பயணிக்கும் போது, இரவு நேரத்தில் Laptop, Mobile எல்லாத்தையும் தூக்கி துரப் போட்டுவிட்டு கண்ணை மூடாமல் கண்ணை மூடியது போல உணரும் போது மனதில் தோன்றிய விடயங்கள் அடங்கிய பதிவு. சுவாரஸ்யமாக எதுவும் இருக்காது. சுய புலம்பல் மட்டுமே!
***
திடீரென ஒருநாள் விழித்துப் பார்க்கும் போது கண்டது எல்லாம் கனவாகிப் போய் நாம் இன்னும் சின்னப்பிள்ளையாகவே இருந்தால் எப்படி இருக்கும்?
வாழ்க்கையில் நாம் கடந்து வந்த பாதைகள் அத்தனையுமே மீள நினைத்துப் பார்க்கும் போது அப்படித்தான் இருக்கும். வாழ்க்கை என்பது ஒரு நேரான பாதையில் ஓடுவதைப் போன்றது. பலர் கூட ஓடி வருவார்கள் சிலர் இடையிடையே வரும் திருப்பங்களில் திரும்பிவிடுவார்கள். சிலர் இன்னுமொரு திருப்பத்தில் மீண்டும் வந்து சேர்ந்து கொள்வார்கள். சிலர் இடையில் புதிதாக இணைந்து கொள்வார்கள். ஒரு சிலர் கடைசி வரை எம்முடனேயே ஓடி வருவார்கள். கடைசி வரை வருவார்கள் என்று நினைத்தவர்கள் கடைசிவரை வருவதுமில்லை. இடையிலேயே திரும்பிவிடுவார்கள் என்று நினைத்தவர்கள் எல்லாரும் இடையிலே விலகிவிடுவதுமில்லை.
இங்கு வாழ்க்கைப் பாதை பிரியும் இடங்கள் அவரவர் நிலைகளைப் பொறுத்து வேறுபடும். பாடசாலைக் காலம், கல்லூரிக் காலம், வேலைக்குச் செல்லும் காலம், திருமணம் நடக்கும் காலம் என்று பொதுவாக வரையறுக்கலாம். பாடசாலை அல்லது கல்லூரியில் படிக்கும் காலங்களில் வரும் பிரிவுகள்தான் மிகுந்த கவலையை தருகிறது. ஏன் என்று அதை உற்று நோக்கிப் பார்த்தால் பாடசாலை அல்லது கல்லூரிக் காலங்களில் எமக்குக் கிடைத்தது அதிகம் அதனால் அந்தக் காலத்தை இழக்கும் போது இழப்பதும் அதிகம். அதற்குப் பிறகு கொஞ்சம் இயல்பிலிருந்து விலகி நடிக்கவேண்டியிருக்கிறது. கொஞ்சம் வயதானவர்கள் போல் உணருகிறோம்.
என்னைப் பொறுத்தவரையில் 11 வருடங்கள் படித்த பாடசாலையிலிருந்து திடீரென விலகிய போது நண்பர்கள், எமது பாடசாலை இசைக்குழுவில் இருந்த எனக்கான இடம், இன்றும் மெதுவாகச் செல்லும் 155 பஸ், பிறந்து வளர்ந்த இடம் இன்னும் சில விடயங்கள் என்று அனைத்தையும் இழக்கவேண்டியிருந்தது. அதன் பிறகு மீண்டும் ஒரு புதிய பாடசாலை, புதிய நண்பர்கள் புதிய இடம் என்று இன்னுமொரு பாதையில் ஓடவேண்டியிருந்தது. அதாவது கஷ்டப்பட்டு ஒரு மலையில் ஏறி வந்து உச்சியை எட்டும் போது யாரோ கீழே பிடித்துத் தள்ளிவிட்டு திரும்ப ஏறி வா என்று சொன்னது மாதிரியான ஒரு உணர்வு. ஆனால் தள்ளிவிட்டது நல்லதுக்குத்தான் என்று அன்றுதான் அறிந்து கொண்டேன். இரண்டாவது முறை ஏறும் போதுதான் எத்தனை விடயங்களை பார்க்க, அனுபவிக்கத் தவறிவிட்டோம் என்று அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
ஒவ்வொரு முறையும் பாதையை தேர்ந்தெடுக்கும் போதும் "அடுத்தது என்ன?" என்ற ஒரு கேள்வி மனதில் மிகப்பெரிய கேள்விக்குறிடன் விடைக்காகக் காத்திருக்கும். ஒவ்வொரு முறை எதையாவது எதிர்பார்த்து ஏதாவது முடிவுகளை எடுக்கும் போதும் அது "நீ யார்டா முடிவெடுக்க என்று" கைகொட்டிச் சிரிக்கும்.
ஆனால் இதுவரை கிடைத்த அனுபவங்கள் சகிப்புத்தன்னையை வளர்த்துக் கொள்வது எப்படி?, எதிர்பார்ப்புக்களை குறைப்பது எப்படி?, விமர்சனங்களுக்கு முகம் கொடுப்பது எப்படி? என்று கற்றுக் கொடுத்திருக்கிறது. தவிர பல நண்பர்களையும், எதிரிகளையும், சில மனிதர்களையும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.
இன்னும் சம்பாதித்துக் கொடுக்கப் போகும் மனிதர்கள், நண்பர்கள், எதிரிகளுக்காகவும், அனுபவங்களுக்காகவும், அடுத்தது என்ன என்ற கேள்வியுடனும் காத்திருக்கிறேன்.
WHATEVER HAPPENS LIFE GOES ON... =)
Tweet

நீங்கள் போட்டுத்தாக்கியது
Post a Comment