காதலர்தினத்தையொட்டி காதல் கவிதை எழுத முடியாமல் கஸ்டப்படும் நம்ம பதிவரி ஒருத்தர் கடவுளைக் கும்பிடுகிறார் உடனே நான் கவிதை எழுதித்தருகிறேன் என்று கூறி வரும் பதிவுக்கடவுளின் புலமையைச் சோதிக்க பதிவர் பல கேள்விகளை திருவிளையாடல் ஸ்டைலில் கேட்கிறார்...
 
பிரிக்கமுடியாதது என்னவோ? - கோபியும் ருவிட்டரும்
 
பிரியக்கூடாதது? - மொக்கையும் கும்மியும்
 
சேர்ந்தே இருப்பது? - வந்தியும் இளமையும்
 
சேராதிருப்பது? - யோவும் நேரமும்
 
சொல்லக்கூடாதது? - அனானிக்கு பதில்
 
சொல்லக்கூடியது? - பின்னூட்டத்துக்கு நன்றி
 
வரக்கூடாதது? -  சீரியஸ் சந்தேகம்
 
வரவேண்டியது? - மொக்கையான சந்தேகம்  
 
அடிக்கக்கூடாதது? -  பதிவில் காப்பி(copy)
 
அடிக்கவேண்டியது? - காப்பியடிப்பவன் மண்டையில் 
 
வேண்டக்கூடாதது? - மைனஸ் வோட்டு 
 
வேண்டப்படுவது? - ஓட்டும் பின்னூட்டமும்
 
எழுதக்கூடாதது? - அரசியல் உண்மைகள்
 
எழுதவேண்டியது?  - மொக்கையும் சிரிப்பும்
 
பார்க்கக்கூடாதது? - மொக்கையில் லாஜிக்
 
பார்த்து ரசிப்பது? - போட்டோவும் கமெண்ட்சும்
 
பதிவில் சிறந்தது? - காமடி, மொக்கை, கும்மி
 
கும்மியென்பது? - கொலைவெறித்தாக்குதல்
 
கமண்டுக்கு? -  கன்கொன்
 
கடிக்கு? - அப்ரிடி
 
முடிக்கு? - சுபாங்கன்
 
வெடிக்கு? -  புல்லட் 
 
கதைக்கு? - ஆதிரை
கருத்துக்கு? - பாலா
கவிதைக்கு? -  கீர்த்தி
 
காதலுக்கு?  -  அனுதினன்
 
பதிவுக்கு? - நான்
பதிலுக்கு? - நீ
இவரது அறிவைப்பார்த்து வியந்த அந்தப்பதிவர் பதிவுக்கடவுளிடம் கவிதை எழுதி வாங்கிக்கொண்டு காதலியைத்தேடிப் போகிறார்.
 
:-D ஹ..ஹ..ஹா!!!